கொரோணா வைரஸ் (COVID-10) தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் ஓர் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் எமது பாடசாலை மாணவர்கள் சிலரும் கடுமையாக பாதிப்படைந்திருந்தனர், பாதிக்கப்பட்டுள்ள யாழ் வட்டு இந்துக் கல்லூரி மாணவர்களின் குடும்பம்பங்களுக்கு மனிதாபிமான உதவியினை எமது பாடசாலை உள்ளக சமூகம் முன்வந்து செய்துள்ளது இதில் அதிபர் ஆசிரியர்கள் நலன் விரும்பிகள் பழையமாணவர்கள் கல்விசாரா ஊளியர்கள் என்பவர்களின் பங்களிப்பு அளப்பெரியது. இதன் மூலம் பல குடும்பங்கள் உதவியினைப் பெற்றுக் கொண்டன.
தரம் 11 மாணவர்களுக்கான விடுமுறைகால சுயகற்றலு்க்கான செயலட்டைகள் (5.05.2020) அன்று வழங்கப்பட்டது. குறித்த ஒழுங்கு முறையில் தரம் 11 மாணவர்களின் பெற்றோர் அவற்றைப் பெற்றுக்கொண்டனர். எமது பாடசாலை ஆசிரியர்கள் தயாரித்த செயலட்டைகளை வழங்க நிதி உதவி வழங்கிய 2018 தொழில்நுட்ப பாட பழைய மாணவர்களான இந்துவின் முத்துக்களுக்கும் யாழ் இந்துக் கல்லுாரியின் செயலட்டைகளின் வன் பிரதிகளை வழங்க நிதி உதவி செய்த யாழ் இந்துக் கல்லுாரியின் 2002 பழைய மாணவர்களுக்கும் பாடசாலை சார்பான நன்றிகளைத் தெரிவித்துக்கொ்ளகின்றோம்.
கடந்த 2019 டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த (சா-தர) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில் எமது கல்லூரியில் 1 மாணவர் ஏழு பாடங்களில் A சித்தியை பெற்றுள்ளனர். இதனை விட பல மாணவர்கள் நல்ல பெறுபேற்றினைப் பெற்றுள்ளதோடு 69 வீதமான மாணவர்கள் கணித பாட சித்தியுடன் உயர்தரம் கற்கக் கூடிய பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். எனவே, குறித்த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை எமது கல்லூரிச் சமூகத்தின் சார்பில் மனதாரப் பாராட்டுவதோடு வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். க.பொ.த. (சா.தர) வகுப்புக்களுக்கான விசேட கற்றற் செயற்றிட்டத்திற்கான நிதியுதவி வருடாவருடம் எமது கல்லூரியின் பழைய மாணவர;fshy; வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் எமது கல்லூரிச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். பெறுபேற்று விபரங்களை முழுமையாகப் பார்வையிட கீழேயுள்ள இணைப்பில் Click செய்க.