• சித்தன்கேணியைச் சேர்ந்த அம்பலவாண நாவலர் அவர்கள் ஆறுமுக நாவலரோடு இணைந்து அவரின் ஆசீர்வாதத்தைப் பெற்று ஆறுமுகநாவலரின் சீடனாக பணியாற்றி (09.10.1894) விஐய தசமித்தினத்தில் ஆரம்பிகப்பட்டு அம்பலவாண நாவலர் தலைமையில் அவரின் உறவினர் நொத்தாரிசு சிதம்பரப்பிள்ளையின் உதவியுடன் நடாத்தப்பட்டு வந்தது.
  • நவாரியுர் சோமசுந்தரப்புலவர் இக்கல்லுாரியில் இணைந்து தமிழ்ப்பாட ஆசிரியராக நீண்டகாலம் (1898 - 1938) சேவையாற்றினார்.
  • 1906 இல் சின்னத்துரை அவர்கள் அதிபரானார். 

 

இவரின் பின் திரு.N.ஜெயநாயகம் அவர்கள் அதிபராகக்கடமையேற்றார்.வட்டுக்கோட்டையிலும் கொழும்பிலும் பழைய மாணவர் சங்கங்களை அமைத்து பழைய மாணவர் ,பெற்றார்,கிராமத்தவருடைய ஆதரவைப்பெற்றார். நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாட நடவடிக்கை எடுத்தார்.பாரிய இடப்பெயர்வின் போதும் பாடசாலையை சிரமங்களின் மத்தியில் இயக்கினார்.

 
1996இல் பாடசாலையின் அதிபராக திரு.ச.இராமலிங்கம் அவர்கள் கடமையேற்றார்.இவர் இப்பாடசாலையில் 1981 – 1995 வரை ஆசிரியராகப் பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.நீண்ட காலம் பாடசாலையின் அதிபராகப் பணியாற்றியவர்களில் ஒருவராகவும் இவர் திகழ்ந்தார்.இவருடைய காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாடசாலையில் இடம்பெற்றன.180x25 இரண்டு மாடிக்கட்டடம்,விவசாய அறை,செயற்பாட்டறை,முன்பிருந்த கணனி அறை, அமெரிக்காவிலுள்ள பழையமாணவன் திரு.ந.முருகதாஸ் அவர்களின் நிதிஉதவியுடன் முன்பிருந்த நுழைவாயில் வளைவு,போன்றவை அமைக்கப்பட்டன.17 பரப்பு நிலம் பொதுமக்களின் நிதி உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டு விளையாட்டு மைதானம் விஸ்தரிக்கப்பட்டமை,திருமதி.ராணி சின்னத்தம்பி அவர்களின் முதலீட்டுடன் கோழி வளர்ப்பு,காளான் வளர்ப்பு மேற்கொள்ளப்பட்டமை, பற்சிகிச்சை நிலையம் உருவாக்கப்பட்டமை, பாடசாலையின் ஸ்தாபகர் அம்பலவாணரின் சிலை உருவாககப்பட்டமை,ஆங்கில மொழி மூலக் கல்வி உருவாக்கப்பட்டமை போன்ற பல அபிவிருத்திகள் இவருடைய காலத்திலே ஏற்பட்டன.எமது பாடசாலை நவோதயா பாடசாலையாக மாற்றப்பட்டமையும் இவருடைய காலத்திலேயேயாகும்.
 
இவர் ஓய்வுபெற்றதன் பின் பாடசாலையின் பிரதி அதிபர் திரு.வே.குணபாலசிங்கம் அவர்கள் அதிபர் பொறுப்புகளையும் ஏற்று பாடசாலையை சிறப்பாக நிர்வகித்தார்.
திருமதி. ஜெகதீஸ்வரி அருள்மயம் அவர்கள் பாடசாலையின் கடமை நிறைவேற்று அதிபராக 2009 இல் கடமையேற்றார்.இவரும் இப்பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தவராவார்.மேலும் ஒரு இரண்டு மாடிக்கட்டடம் அமைக்கும்பணி இவருடையகாலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.குறுகிய காலமே இப்பாடசாலையின் அதிபராகப் பணியாற்றும் சந்தர்ப்பம் இவருக்குக் கிடைத்தது.
அதன் பின் பாடசாலையின் பிரதி அதிபர் திரு.வே.குணபாலசிங்கம் அவர்கள் அதிபர் பொறுப்புகளையும் ஏற்று பாடசாலையை சிறப்பாக நிர்வகித்தார்.
 
இவரைத் தொடர்ந்து 1AB பாடசாலைகளுக்கு தரம்-1 அதிபர்கள் நியமிக்கப்படவேண்டும் என்ற சுற்றுநிருபத்திற்கு அமைய இப் பாடசாலையில் ஆசிரியராக முன்னர் பணியாற்றிய திரு.சி.சிவகணேசசுந்தரன் அவர்கள் 2010 இல் அதிபராக நியமிக்கப்பட்டார். பாடசாலையின் பொறுப்புகள் உரியகாலத்தில் ஒப்படைக்கப்படாததால் பல சிரமங்களை எதிர்நோக்கினார்.குறுகிய காலமே அதிபராகப் பணியாற்றினாலும் செயற்பாடற்றிருந்த பழைய மாணவர் சங்கத்திற்கு புத்துயிரூட்டியமை,பாடசாலை மைதானத்தின் ஒருபக்க மதிலை பழைய மாணவரின் நிதி உதவியுடன் அமைத்தமை,அலுவலக செயற்பாடுகளை மேலும் சீர்படுத்தியமை,வேள்ட் விசன் உதவியுடன் நூலகத்தினை முழுமையாகப் புனரமைத்தமை பாடசாலை தளபாடங்களை சீர்படுத்தியமை போன்ற பல செயற்பாடுகள் பாடசாலையின் நன்மை கருதி இவரால் மேற்கொள்ளப்பட்டன.1000 பாடசாலைத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் தயாரிக்கப்பட்டு எமது பாடசாலை 1000 பாடசாலைத்திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டமை இவருடையகாலத்திலேயே ஆகும்.
 
இவரைத் தொடர்ந்து   திரு.சி.தனஞ்சயன் அவர்கள் 2011இல் அதிபராகப் பொறுப்பேற்று பாடசாலையின் செயற்பாடுகளை சிறப்பாக நடாத்தி வந்தார்.இவரும் இப்பாடசாலையின் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.பாடசாலையின் கற்றல்,கற்பித்தல் செயற்பாடுகளை திறமையான பழையமாணவரின் உதவியையும் பெற்று ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன் சிறப்பாக செயற்படுத்தி வந்தார்.புதிய இரண்டு மாடிக்கட்டடத்தின் வேலைகள் இவருடைய காலத்திலேயே பூர்த்தி செய்யப்பட்டன.மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம்,தொழில்நுட்பபீடம்,  பாடசாலையின் புதிய நுழைவாயில் முகப்பு

போன்றன அமைக்கப்பட்டுள்ளன.பொது விஞ்ஞானகூடத்தை உள்ளடக்கிய மாடிக்கட்டடத்தொகுதியும் இவருடைய காலத்திலேயே அமைக்கப்பட்டன.க.பொ.த.உயர்தரப்பிரிவில் தொழில்நுட்பத்துறை ஆரம்பிக்கப்பட்டதும்(2013) இவருடைய காலத்திலேயே ஆகும். வருடாவருடம் பல்வேறு துறைகளுக்காகவும் பல்கலைக்கழக அனுமதிகளைப் பெற்று மாணவர்கள் செல்கின்ற எமது பாடசாலை 1AB SUPER பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டதும்  இவருடைய காலத்திலேயே ஆகும்.

 

இவரைத் தொடர்ந்து தற்போது திரு.நா.தனபாலசிங்கம் அவர்கள் பாடசாலையின் வளர்ச்சி நிலையை பேணும் மனவுறுதியோடு அதிபராகப் பதவியேற்றுள்ளார்.இவர் எமதுபாடசாலையில் முன்னர் நீண்டகாலம் ஆசிரியராகப் பணிபுரிந்ததுடன் அக்காலத்தில் எமது கொடிகீதத்தையும் உருவாக்கியவராவார்.