கடந்த 2019 டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த (சா-தர) பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தவகையில் எமது கல்லூரியில் 1 மாணவர் ஏழு பாடங்களில் A சித்தியை பெற்றுள்ளனர். இதனை விட பல மாணவர்கள் நல்ல பெறுபேற்றினைப் பெற்றுள்ளதோடு 69 வீதமான மாணவர்கள் கணித பாட சித்தியுடன் உயர்தரம் கற்கக் கூடிய பெறுபேற்றைப் பெற்றுள்ளனர். எனவே, குறித்த பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை எமது கல்லூரிச் சமூகத்தின் சார்பில் மனதாரப் பாராட்டுவதோடு வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். க.பொ.த. (சா.தர) வகுப்புக்களுக்கான விசேட கற்றற் செயற்றிட்டத்திற்கான நிதியுதவி வருடாவருடம் எமது கல்லூரியின் பழைய மாணவர;fshy; வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் எமது கல்லூரிச் சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகள். பெறுபேற்று விபரங்களை முழுமையாகப் பார்வையிட கீழேயுள்ள இணைப்பில் Click செய்க.