- எமது பாடசாலையின் 125 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு பல செயற்திட்டங்கள் வட்டு இந்துவின் பழைய மாணவர்களான வட்டுவின் முத்துக்களால் முன்னெடுக்கப்பட்டன.
- வட்டு இந்துக்கல்லுாரியின் 125 ஆவது ஆண்டு விழா மூன்று நாட்கள் இடம் பெற்றது
- 1 ஆவது நாள் பழைய மாணவர்கள் மற்றும் எமது மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் போன்றோரின் வீதிநடையுடன் ஆரம்பமானது.
- 2 வது நாள் நுாற்றாட்டு விழாவும்
- 3வது நாள் நுாற்றாண்டு விழா தொடர்பான மலர்வெளியீட்டு விழாவும் இடம்பெற்றது
வட்டுவின் முத்துக்களால் ஆற்றப்பட்வை
125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபவணி
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம் நடைபவணி இடம்பெற்றது.
பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இணைந்து முன்னெடுத்த இவ் நடைபவணியானது சித்தங்கேணி பிள்ளையார் ஆலயத்தில் காலை 7.30 மணியளவில் விசேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகி சித்தங்கேணி வட்டுக்கோட்டை பிரதான வீதியூடாக பேரணியாக சென்று பாடசாலை மைதானத்தில் நிறைவடைந்தது.
அங்கு பாடசாலை கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பழைய மாணவர்களால் அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கு மண்டபம் மற்றும் பாடசாலை சிற்றுண்டிச்சாலை என்பன திறந்து வைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து பழைய மாணவர்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இடையிலான விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன.
பின்பு பாடசாலை வள்ளியம்மை மண்டபத்தில் வரவேற்பு நடனத்துடன் கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. அதில் பாடசாலை அதிபர் உரை,உப அதிபர் உரை, வில்லுப்பாட்டு,இசைக்கச்சேரி என்பன இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து மதியபோசனம் இடம்பெற்று நன்றியுரையுடன் நிகழ்வுகள் நிறைவுற்றது.